11.30.2011

புலம்பெயர் வல்வையர்களே

புலம்பெயர் வல்வையர்களே 


 எமது மன்றத்தின் சார்பில் எமது வல்வையின் கலை இலக்கிய கலாசார விருத்திக்காக கடந்த ஒரு வருடமாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எனினும்.நிதி பற்றாக்குறை காரணமாக  பலவற்றை நிறைவேற்ற முடியவில்லை.இருந்தும் எமது மன்ற உறுப்பினர்களின் அயராத முயற்சியால் சில செயற்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.அவையாவன 
கலை இலக்கிய விழாவை நடத்தியமை 
கலை இலக்கிய போட்டிகளை நடத்தி விருதுகள் வழங்கியமை.
நெய்தல் சஞ்சிகை வெளியிட்டமை.
                              போன்ற சில திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.மேலும் எமது செயற்பாடுகளை மேற்கொள்ளவும்  எமது வல்வையின் கலை இலக்கிய கலாசாரத்தை  விருத்தி செய்யவும் புலம்பெயர் உறவுகளின் உதவியை நாடி நிற்கின்றோம்.
                                                                               நன்றி 
கலை கலாசார இலக்கிய மன்றம் 
வல்வெட்டித்துறை 
தொடர்புகளுக்கு
0094770567583
0094724050065

11.06.2011

பிரதேச செயலகத்தின் உயரிய விருதான ''கலைப்பரிதி'' விருது வல்வை கலைஞர்களுக்கு வழங்கி கௌரவிப்பு

வடமராட்சி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் வல்வை
கலைஞர்களுக்கு  பிரதேச செயலகத்தின் உயரிய விருதான ''கலைப்பரிதி''விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.நெடியகாடு வல்வெட்டித்துறையை சேர்ந்த 
K.N.தேவதாஸ் அவர்களுக்கு நாடகத்துறைக்காகவும்   வல்வை N.அனந்தராஜ் அவர்களுக்கு இலக்கிய துறைக்காகவும் இவ்விருதுகள் 
 வழங்கி கௌரவிக்கப்பட்டன.   இவர்களை வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தினர் சார்பாக வாழ்த்துக்களை 
தெரிவித்துக்கொள்கின்றோம். 




K.N தேவதாஸ் அவர்களுக்கு விருது வழங்கிய போது

வல்வை N.அனந்தராஜ் அவர்களுக்கு விருது வழங்கிய போது

11.05.2011

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் கலை கலாசார இலக்கிய மன்றத்தினர்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழா பிரதேசசெயலர் வரதீஸ்வரன் தலைமையில் 05 .11 .2011 அன்று பருத்தித்துறையில் நடைபெற்றது.இதில் கலை கலாசார இலக்கிய மன்றத்தினர் மற்றும் பொலிகை கலை இலக்கிய மன்றத்தினரின்  தமிழ் பெரியாரின் வேடப்புனைவுகள் இடம்பெற்றது. மற்றும் வல்வை மகளிர் மகாவித்தியாலய மாணவியரின் ஒயிலாட்டம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.இது தவிர பொலிகை சிவலிங்கத்தின் கம்படி சிலம்படி மற்றும் கரகாட்டம் என்பன இடம்பெற்றன. இதனை தொடர்ந்து தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் பரிசளிப்பு விழாவின் போது வல்வை மாணவ மாணவிகளும் பல பரிசில்களை பெற்றனர்.