12.04.2011

கலை கலாசார இலக்கிய மன்ற பொதுக்கூட்டம்
















கலை கலாசார இலக்கிய மன்ற பொதுக்கூட்டம் இன்று மலை 4 .௦௦ மணிக்கு கணபதி பாலர் பாடசாலையில் நடைபெற்றது .இதில் மன்றத்தை பதிவு செய்தல் மற்றும் கலை விழா பற்றிய விடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது .

11.30.2011

புலம்பெயர் வல்வையர்களே

புலம்பெயர் வல்வையர்களே 


 எமது மன்றத்தின் சார்பில் எமது வல்வையின் கலை இலக்கிய கலாசார விருத்திக்காக கடந்த ஒரு வருடமாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எனினும்.நிதி பற்றாக்குறை காரணமாக  பலவற்றை நிறைவேற்ற முடியவில்லை.இருந்தும் எமது மன்ற உறுப்பினர்களின் அயராத முயற்சியால் சில செயற்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.அவையாவன 
கலை இலக்கிய விழாவை நடத்தியமை 
கலை இலக்கிய போட்டிகளை நடத்தி விருதுகள் வழங்கியமை.
நெய்தல் சஞ்சிகை வெளியிட்டமை.
                              போன்ற சில திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.மேலும் எமது செயற்பாடுகளை மேற்கொள்ளவும்  எமது வல்வையின் கலை இலக்கிய கலாசாரத்தை  விருத்தி செய்யவும் புலம்பெயர் உறவுகளின் உதவியை நாடி நிற்கின்றோம்.
                                                                               நன்றி 
கலை கலாசார இலக்கிய மன்றம் 
வல்வெட்டித்துறை 
தொடர்புகளுக்கு
0094770567583
0094724050065

11.06.2011

பிரதேச செயலகத்தின் உயரிய விருதான ''கலைப்பரிதி'' விருது வல்வை கலைஞர்களுக்கு வழங்கி கௌரவிப்பு

வடமராட்சி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் வல்வை
கலைஞர்களுக்கு  பிரதேச செயலகத்தின் உயரிய விருதான ''கலைப்பரிதி''விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.நெடியகாடு வல்வெட்டித்துறையை சேர்ந்த 
K.N.தேவதாஸ் அவர்களுக்கு நாடகத்துறைக்காகவும்   வல்வை N.அனந்தராஜ் அவர்களுக்கு இலக்கிய துறைக்காகவும் இவ்விருதுகள் 
 வழங்கி கௌரவிக்கப்பட்டன.   இவர்களை வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தினர் சார்பாக வாழ்த்துக்களை 
தெரிவித்துக்கொள்கின்றோம். 




K.N தேவதாஸ் அவர்களுக்கு விருது வழங்கிய போது

வல்வை N.அனந்தராஜ் அவர்களுக்கு விருது வழங்கிய போது

11.05.2011

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் கலை கலாசார இலக்கிய மன்றத்தினர்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழா பிரதேசசெயலர் வரதீஸ்வரன் தலைமையில் 05 .11 .2011 அன்று பருத்தித்துறையில் நடைபெற்றது.இதில் கலை கலாசார இலக்கிய மன்றத்தினர் மற்றும் பொலிகை கலை இலக்கிய மன்றத்தினரின்  தமிழ் பெரியாரின் வேடப்புனைவுகள் இடம்பெற்றது. மற்றும் வல்வை மகளிர் மகாவித்தியாலய மாணவியரின் ஒயிலாட்டம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.இது தவிர பொலிகை சிவலிங்கத்தின் கம்படி சிலம்படி மற்றும் கரகாட்டம் என்பன இடம்பெற்றன. இதனை தொடர்ந்து தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் பரிசளிப்பு விழாவின் போது வல்வை மாணவ மாணவிகளும் பல பரிசில்களை பெற்றனர்.











10.02.2011

பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் பொதுநூலக திறப்புவிழாவும் பரிசளிப்பு விழாவும்

பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் பொதுநூலக திறப்புவிழாவும் பரிசளிப்பு விழாவும்
   
    மேலதிக விபரங்களுக்கு polikaikim.blogspot.com





26.09.2011  அன்று பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் பொதுநூலக திறப்புவிழாவும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது 






10.01.2011

இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து ''நெய்தல்'' இதழ் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம்.

 இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து ''நெய்தல்'' இதழ் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம் .எமது சஞ்சிகை மேலும் வளரவும் எமது மன்றம் தொடர்ந்து செயற்படவும் கலை  இலக்கிய ஆர்வலர்களிடம் கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். நெய்தல் இதழை பெற எம்முடன் தொடர்புகொள்ளவும்.

kalai.vvt@gmail.com
  

நவராத்திரிவிழா ஆரம்பம்

கல்வி செல்வம் வீரம் ஆகிய முக்கலைகளுக்குமான ஒருமித்த விழாவாகவும் விரதமாகவும் நவராத்திரிவிழா கொண்டாடப்படுகிறது . அதனடிப்படையில் வல்வையிலும் 28 .09 .2011  தொடக்கம் வாசிகசாலைகள் பாடசாலைகள் ஆலயங்கள் தொழிலிடங்கள் என பல்வேறுபட்ட இடங்களில் நவராத்திரிவிழா கொண்டாடப்படுகிறது.குறிப்பாக குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் நவராத்திரிவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

9.28.2011

வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வல்வையின்''கலைச்சிகரம்'' ''எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


பிரதமவிருந்தினர் அவர்களால் வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வல்வையின்''கலைச்சிகரம்'' விருது வழங்கப்படுகிறது 



கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 
வருடாந்த விருது வழங்கல் விழாவின் போது வல்வையின் பழம்பெரும் கலைஞர்களுக்கான விருதாக வல்வையின் கலை சிகரம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. அதன் படி இவ்வாண்டுக்கான விருது வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

9.26.2011

கலை கலாசார இலக்கிய மன்றத்தின் வருடாந்த விருது வழங்கல் விழாவும் நெய்தல் சஞ்சிகையின் கன்னி இதழ் வெளியீட்டு விழாவும்





























வல்வெட்டித்துறையின் கலை இலக்கியத்ததை வளர்க்கும் நோக்கோடு கலை கலாசார இலக்கிய மன்றத்தால் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழக பேராசிரியர் திரு க சிதம்பரநாதன் கலந்து சிறப்பித்தார்