9.28.2011

வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வல்வையின்''கலைச்சிகரம்'' ''எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


பிரதமவிருந்தினர் அவர்களால் வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வல்வையின்''கலைச்சிகரம்'' விருது வழங்கப்படுகிறது 



கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 
வருடாந்த விருது வழங்கல் விழாவின் போது வல்வையின் பழம்பெரும் கலைஞர்களுக்கான விருதாக வல்வையின் கலை சிகரம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. அதன் படி இவ்வாண்டுக்கான விருது வ.ஆ.அதிருபசிங்கம் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

9.26.2011

கலை கலாசார இலக்கிய மன்றத்தின் வருடாந்த விருது வழங்கல் விழாவும் நெய்தல் சஞ்சிகையின் கன்னி இதழ் வெளியீட்டு விழாவும்





























வல்வெட்டித்துறையின் கலை இலக்கியத்ததை வளர்க்கும் நோக்கோடு கலை கலாசார இலக்கிய மன்றத்தால் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழக பேராசிரியர் திரு க சிதம்பரநாதன் கலந்து சிறப்பித்தார்

9.01.2011

எமது எதிர்கால செயற்பாடுகள்

வல்வையில் கலை இலக்கியத்தை ஊக்கிவிக்கும் நோக்கோடு அழிவடைந்து செல்லும் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டவும் நாம் எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.

01 . கலை இலக்கிய வகுப்புகளை ஆரம்பித்தல்
            கிற்றார்,மிருதங்கம்,ஓகன்

02 .வாசிப்பு அதிகரிக்க மாணவர்களிடையே பயிற்சி பட்டறையை     ஏற்பாடு செய்தல்.

03 .இலக்கிய கருத்தரங்குகளை நடத்துதல்.

04 .கலை இலக்கிய வருடாந்த விழாவை நடத்துதல்.

05 .வருடாந்தம் கலை இலக்கிய போட்டிகளை நடத்துதல்,விருதுகள் வழங்குதல்

06 .விழிப்புணர்வு நாடகங்களை செய்தல்.

07 .இளைஞர்களை போதை பாவனையில் உள்ளாகாமல் தடுக்க கருத்தரங்குகளை    நடத்துதல்.

            மற்றும் பல திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளோம்.

சஞ்சிகை வெளியீடு

எமது பிரதேசத்தில் இருந்து சஞ்சிகை எதுவும் வெளிவராத காரணத்தால்  
வல்வையின்  இளம் இலக்கிய துறையினருக்கு களம் அமைத்து கொடுக்கும் முகமாக  "நெய்தல்" எனும் சஞ்சிகை எமது மன்றத்தால் வெளியிடப்படவுள்ளது. இதன் கன்னி இதழ் 25 .09 .2011 அன்று வெளியிடப்படவுள்ளது.

கலை இலக்கிய பெரு விழா-2011

வல்வையில் மறைந்திருக்கும் கலைஞர்களை வெளி உலகிற்கு 
அறிமுகப்படுத்துவதற்காக  கலை இலக்கிய பெரு விழா 01.01  2011.
 நடத்தப்பட்டது.இதில் பல கலைஞர்களுக்கு களம் அமைத்து 
கொடுக்கப்பட்டது. இதை  பெருவாரியான மக்கள் கண்டுகளித்தனர்.இதில் தேசிய மட்ட போட்டியில் 1ம் இடம் பெற்ற வல்வைமைந்தன்  செல்வன் மு.திவாகர் அவர்களுக்கு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. 

நோக்கம்

வல்வையில்அண்மை காலங்களாக கலை இலக்கிய துறை மீதான ஈடுபாடு குறைந்து செல்கின்றது .இதனால் பல வரலாற்று பெருமைகளை  தன்னகத்தே கொண்ட வல்வை நகர் எமது கலை கலாச்சார துறையில் வீழ்ச்சி அடைந்து செல்கின்றது. எனவே இந்நிலையை நீக்கி வல்வையில் கலை இலக்கிய துறையை ஊக்கிவிக்கவும்,எமது  பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினரிடையே  எடுத்து செல்வதற்காகவும் ஒரு மன்றம் அவசியம் என்பதை உணர்ந்து கலை இலக்கிய  ஆர்வலர்களாகிய நாம் 
01  01  2011  அன்று இம் மன்றத்தை   உருவாக்கினோம்.அதனடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.